உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
கடல், வான், தரை வழியே நுழைந்து காலை முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ரஷ்ய தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில், அவர்களின் சிகிச்சைக்காக பலர் ரத்த தானம் செய்து வருகின்றனர். இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.