உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.
அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் விமான தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா பல மணி நேரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை..