Categories
மாநில செய்திகள்

Breaking: உச்சகட்ட அதிர்ச்சி…. அய்யயோ இனி அவ்வளவு தான்…!!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 2,089 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8,77,279 ஆகவும், 19 பேர் உயிர் இழந்ததால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,659 ஆகவும், 1,241 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,52,463 ஆகவும் உயர்ந்துள்ளது.

Categories

Tech |