சென்னையில் பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்தது ரூ.89,70 ஆகவும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.82,66 ஆகவும் உள்ளது. இந்த புதிய விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.