Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனடி அமல்…. இனி முகக்கவசம் கட்டாயம்…. மீறினால் ரூ.500 அபராதம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.அதன்படி வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முககவசம் கட்டாயம் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது .

அவ்வகையில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் என்றும் வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கிருமிநாசினி வைக்காமல் உத்தரவை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று  அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |