Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனே இந்த எண்ணிற்கு போன் செய்யுங்கள்… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

அது மட்டுமன்றி அனைத்து கட்சிகளும் கூட்டணி பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இதற்கு மத்தியில் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தால் 18004256669 மற்றும் 004- 28271915 ஆகிய தொலைபேசி எண்களிலும் 94453 94453 வாட்ஸ்அப் எண்ணிலும், [email protected]என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |