கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. மக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதையடுத்து தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்களுக்கும் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஏனெனில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் திமுக மூத்த நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களுடன் களச்சூழல் குறித்து அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.