தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று (மார்ச் 4) முதல் உயர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று (மார்ச் 4) முதல் உயர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூபாய் 510-லிருந்து ரூபாய் 530 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரை லிட்டர் நெய் 260 ரூபாயிலிருந்து 270 ஆக உயர்கிறது. தயிர் ஒரு லிட்டர் ரூ. 60 (பழைய விலை ரூ.55), தயிர் அரை லிட்டர் ரூ.30 (பழைய விலை ரூ.27), பாதாம் பவுடர் 200mg ரூ100 (பழையவிலை ரூ.80), குல்பி ஐஸ் 60ml ரூ. 30 (பழையவிலை ரூ.25), வெண்ணிலா ஐஸ்கிரீம் 100ml ரூ.30 (பழையவிலை ரூ.28), சாக்லேட் 100ml ரூ. 30 (பழையவிலை ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது.