தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முன்னேறிய வகுப்புக்கான 10% இட ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைகழகம் அமல்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எம்.டெக் பிரிவு மாணவர் சேர்க்கையில் கடந்த முறை போலவே இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்கலைகழகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.