Categories
மாநில செய்திகள்

BREAKING: உயிருடனான குழந்தை இறந்ததாக ஒப்படைப்பு… மிக அதிர்ச்சி சம்பவம்…!!!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட பச்சிளம் குழந்தை மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளத்தை சேர்ந்த பிலவேந்திரன் ராஜா மற்றும் பாத்திமா மேரி என்ற தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பாத்திமா மேரி கர்ப்பமானார். இவருக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்படவே வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து. பின்னர் மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 700 கிராம் எடை மட்டுமே இருந்தது. அந்த குழந்தை சுவாச பிரச்சனை காரணமாக பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக செவிலியர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அவரது பெற்றோர்கள் குழந்தையை புதைப்பதற்கு மயானத்திற்கு எடுத்துச் சென்று, புதைக்க தூக்கிய போது குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் மீண்டும் குழந்தையின் உடலை தூக்கிக்கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. குழந்தை இறந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று அந்த மருத்துவமனையின் தலைவர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |