Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: வருண் சிங்க் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு மாற்ற திட்டம்…? வெளியான தகவல்…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 40-45 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 80% தீ காயம் இல்லை என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண்சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் பரிசீலனை  செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |