Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்……!!!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் என்ற உருவான காற்று தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்து டிசம்பர் எட்டாம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரி அருகில் வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் டிசம்பர் எட்டாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |