தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இதனையடுத்து அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5%உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர் களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக மற்றும் பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக உடனும் பங்கீடு உறுதி ஆகி விட்டதாகவும், 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வும் கூறப்படுகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் மற்றும் துணை முதல்வர் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளனர்.