இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை 6 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. இதில் ஊரடங்கை மேலும் நீடித்து அதிகாடியான தளர்வுகளை கொடுக்கலாம் என்றும், மாநில முதல்வர்கள் 15ஆம் தேதி ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியதாக சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுவதாக காலை பிரதமர் அலுவலகம் தெரிவித்ததையடுத்து தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகின்றார். அதில்,கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும். உலக நாடுகளை மண்டியிட வைத்துவிட்டது கொரோனா எனும் ஒரு வைரஸ். இந்தியா ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். எதையும் செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கொரோனா தொற்று ஏற்பட்டு 4 மாதங்கள் கடந்துவிட்டது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது. யாரும் எதிர்பாராத விபரீதம் இது என்று தெரிவித்தார்.