Categories
மாநில செய்திகள்

#BREAKING : “உள்ளாட்சித் தேர்தல்” திடீரென ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கடம்பூர் பேரூராட்சியில் வருகிற 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மயிலாடுதுறை நகராட்சியில் 19-வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 19-வது வார்டு அதிமுக வேட்பாளர் அன்னதாச்சி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். எனவே அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Categories

Tech |