ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது அதிமுக.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நடைபெற இருக்கிறது.. இந்த தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான பணிகளை செய்து வருகிறது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது..
இந்த நிலையில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அந்த மனுவில் , சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த கூடாது. இரண்டு கட்டமாக தேர்தலை நடத்துவது கள்ள ஓட்டு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.