Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தல்… மது விற்க தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!!

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு 6, 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் மது பாட்டில் விற்க தடை விதித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்..

அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதியில் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மது பாட்டில்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மதுக்கூடம் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |