உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒன்றரை மணி நேரம் நீட்டிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியுள்ளது தேர்தல் ஆணையம்..