இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதன் பிறகு தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்திட வாரீர், ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்போம் என்று பாடலுடன் தனது உரையைத் தொடங்கினார்.
இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின் 6 கோடியில் மதுரை காந்தி அருங்காட்சியகம் நவீன முறையில் புதுப்பிக்கப் படும் என்று கூறியுள்ளார். மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகை 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.