உண்மையை ஊடகங்களுக்கு சொல்லத் தயார் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு முதல்வராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து அவரது வீடுகள், கடை என அனைத்தையும் மக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தன.ர் இதையடுத்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இலங்கையில் புதிய முதல்வராக ரணில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் மஹிந்த ராஜபக்சே தமக்கு ஏற்பட்ட நெருக்கடி, தமது ராஜினாமா முடிவு குறித்து விரைவில் ஊடகங்களிடம் உண்மையை கூற உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற உள்ள செய்தியாளர் சந்திப்பில் அனைத்து விடயங்கள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.