Categories
மாநில செய்திகள்

Breaking: ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திருக்கோவில்களில் பணிபுரியும் இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அவர் படி 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நிதியில் இருந்து 4.64 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கோவில் பூசாரிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு இருப்பது பூசாரிகளின் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் படல் பெற்ற திருக்கோவில்களில் பணிபுரியும் இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாதஸ்வரம் கலைஞர்களுக்கு ரூ.4500, தவில் இசை கலைஞர்களுக்கு ரூ.3000, தாளம் இசை கலைஞர்களுக்கு ரூ.2,250 ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |