9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு பதிவு நிறைவு பெற்றுள்ளது.. 626 ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது..
இந்நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. ஏற்கனவே 39 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 6ஆம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 77.43 சதவீதம் வாக்குகள் பதிவானது.. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன..