Categories
மாநில செய்திகள்

BREAKING : ஊரக உள்ளாட்சி தேர்தல்… சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.. மாநில தேர்தல் ஆணையம்!!

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறும். செப்.,23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.. 25-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறலாம் என்று  தெரிவித்திருந்தது..

இந்த நிலையில், சனிக்கிழமையும் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.. வேட்புமனுவை தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே தனியாக அனுமதிக்கப்படுவர் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.. ஒருவேளை வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவரை முன்மொழிபவர் மனு தாக்கல் செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |