தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டு வருகிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார். 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 இல் வேட்புமனு தாக்கல் தொடக்கம். செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Categories