தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தாமோ அன்பரசன் வெளியிட்டுள்ளார் . மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 115 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சியினருக்கும் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.