தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் ஊரடங்கில் கட்டுமான பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூபாய் 370 லிருந்து 520 ஆகவும், எம் சாண்ட் மணல் ஒரு யூனிட் ரூ.3600இலிருந்து 4000 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லி ஒரு யூனிட் ரூபாய் 2500 லிருந்து ரூ.2,800 ஆகவும், ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 2,450 இருந்து 2,600 ஆகவும் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories