தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பாஸ் இருந்தும் பயணிக்காத நாட்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் ஜூன் 20 வரை பயன்படுத்தப்படாத மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவு நாளை முதல் நீடிக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.