தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கட்டுப்பாடுகள் உள்ள 2,298 பகுதிகளில் ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 401, சென்னையில் 244, குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 2, தர்மபுரியில் மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.