தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாகப் பின்பற்றினால் கொரோனாவின் எந்த அலையும் உள்ளே வரமுடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாநில பொருளாதாரம் காரணமாகவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் பூங்காக்களை திறக்க வில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.