கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து கடைகளும் இரவு 10 மணிவரை இயங்கவும், உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மதுபான கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.