தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஜூலை 12 முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.