தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளுக்கும் தடை விதித்துள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் அனுமதி அளித்துள்ளது.