நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பியவுடன் மூன்று அல்லது நான்கு தவணைகளாக வசூல் செய்ய வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணம் கேட்டு எந்த ஒரு மாணவரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், பேராசிரியர்களுக்கு மாதம் தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Categories