புதுச்சேரி மாநிலத்தில் ஊர்க்காவல் படையில் சுமார் 650 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் காவலர்களுக்கு இணையாக சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வாகனங்கள் பராமரிப்பு, கணினி இயக்குதல், அலுவல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறாரகள். ஆனால் இவர்களுக்கு மதிப்பூதியம் ரூபாய் 849 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புதுச்சேரியில் ஊர்க்காவல் படை காவலர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூபாய் 849 இலிருந்து 951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது என்று உள்துறை செயலாளர் அறிவித்துள்ளார். இதனால் ஊர்காவல்படை காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.