தமிழக அரசின் ஊழல் குறித்து வெளியிட போவதாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதை தெடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நஷ்டம் என பட்டியலை வெளியிட்டார்.
அதில் ஹெல்த் மிக்ஸ் ஆவினுக்கு பதில் தனியார் மூலம் வாங்குவதால் 45 கோடி நஷ்டம், கர்ப்பிணிக்கான கிட்டில் 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு 77 கோடி இழப்பு, ஜி ஸ்கொயர் நிறுவனம் கோவையில் 122 ஏக்கருக்கான லே அவுட்டை வழக்கத்தை விட 8 நாட்களிலேயே பெற்றது எப்படி ? ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சென்னை சிஎம்டிஏ மாறி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலையின் புகாருக்கு பதிலளித்த மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெண்டர் விடுவதற்கு முன்பாகவே முறைகேடு நடந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின்னர்தான் டெண்டரே விடப்பட உள்ளது. அதற்குள் நஷ்டம் என அண்ணாமலை புகார். அண்ணாமலை அறிவு பூர்வமாக புகார் வைப்பார் என நினைத்தேன் ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்க: https://www.seithisolai.com/corruption-in-non-tender-minister-ma-su-denies.php