தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது.அதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே காலை 11 மணிக்கு புழல் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. இங்கும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வது நல்லது.