Categories
மாநில செய்திகள்

BREAKING : எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்….. பெரும் பரபரப்பு….!!!

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இன்று காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். இந்நிலையில் அதிமுக போராட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தண்ணீர் கொடுத்து மேடையிலேயே அமர வைத்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |