தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரிடம் கட்சியை கொடுத்து இழந்துவிட்டதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். கொங்கு மண்டலத்தில் மக்கள் அம்மா மீது அதிக பாசம் கொண்டவர்கள். அதனால் அவர்களுக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்று தான் கட்சியையும், பதவியையும் கொடுத்து விட்டு சென்றேன். இப்போது கட்சியை இழந்து விட்டேன் என சசிகலா கூறியுள்ளார்.