தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்கட்சிகளின் முழக்கத்தால் நண்பகல் 12 மணிக்கு மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. இந்நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, தொடர் முழக்கம் எழுப்பியதால் முதல் நாளான இன்று மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..