Categories
தேசிய செய்திகள்

#BREAKING : எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் – பிரதமர் மோடி!!

அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என எதிர்க் கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், மிக முக்கியமான ஒரு கூட்டத் தொடரில் ஆக்கபூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். உருமாறிய புதிய வகை ஓமிக்ரான் தொடர்பாக நாம் மிகவும் கவனமாக, எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயார் என்று தெரிவித்துள்ளார்..

Categories

Tech |