தமிழகத்தில் திராவிட கட்சியின் போட்டியால் பாஜக வளர முடியவில்லை என குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் இரண்டு திராவிடக் கட்சியின் போட்டியால் தமிழகத்தில் பாஜக வளர முடியவில்லை என்று சென்னையில் நடைபெறும் துக்ளக் விழாவில் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ஒரு ஆளுமையான தலைவர் மறைந்த பிறகும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்துள்ளார். இது முதல்வரின் திறமையை வெளிப்படுத்துகிறது. எனக்கே ஆச்சரியம் என அவர் தெரிவித்தார்.