Categories
தேசிய செய்திகள்

BREAKING: என்னை கொலை செய்ய சதி நடக்குது… மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு…

என்னை கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி சதி செய்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரைக்கு சென்றபோது மம்தா பானர்ஜியை மர்ம நபர்கள் தள்ளிவிட்டதால் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சில நாட்களில் நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன். சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பரப்புரை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். காரை நோக்கிச் செல்லும் போது சிலர் தன்னை தள்ளிவிட்டதால் காலில் காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அளித்த அறிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம், மேற்கு வங்க மாநில பாதுகாப்பு இயக்குனர் விவேக் சகாயை அப்பதவியில் இருந்து நீக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனையடுத்து என்னை கொலை செய்துவிட்டு மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி சதி செய்து உள்ளது என்று மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Categories

Tech |