நெய்வேலியில் பாய்லர் வெடித்ததில் என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி பாய்லர் வெடித்ததற்கு காரணம் என்ன ? இப்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதவில்லையா ? இதற்கெல்லாம் யார் காரணம் ? என்று பல்வேறு கேள்விகள் தொடர்ந்து வரும் நிலையிலேயே 13 பேர் உயிரிழப்பு தொடர்பான இந்த விவகாரத்தில் 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் இதுபோன்ற விஷயங்களில் எங்கெல்லாம் தவறு ஏற்படுகிறதோ அதனை கண்டறிந்து பல்வேறு விதமான அபராதங்களை அவ்வப்போது, சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் மீது விதிக்கின்றது.
இந்த விஷயத்திலே நெய்வேலியின் பாய்லர் வெடித்து உயிரிழப்புகள் நேரிட்டதில் பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. 13 பேர் உயிரிழப்பு மற்றும் பலர் காயம் என்று பல்வேறு விஷயங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.