சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் FIR திருத்தி எழுதப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு சாத்தான்குளம் காவல்நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களது கடைகளில் ஆய்வுவிசாரணை நடத்தி நடந்து வந்தது. அதே போல சிபிசிஐடி ஐ.ஜி சங்கரும் சாத்தன்குளத்தில் முகாமிட்டு ஆய்வு நடத்தினார்.
சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய போது, சிபிசிஐடி பொறுத்தவரை 10 லிருந்து 12 டீம் போட்டுள்ளோம். பலவகைகளில் விசாரித்து வருகின்றோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. தரமான விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயராஜ் மரணம் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை திருத்தி அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் கூடிய விரைவில் முடிவு தெரியும் என்று தெரிவித்தார்.