தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியாகியது.
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பள்ளிகள் மே 4 ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் மதிப்பெண் பட்டியலை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநரிடம் மே 14 ஆம் தேதி தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.