நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் 7 முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். நாளை வாக்களிக்க செல்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார்.