தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ளார்.
சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அடிப்படை விளைவாக 20 லட்சத்தில் இருந்து 5.25 கோடிக்கு ஷாருக்கான் ஏலம் எடுக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அடிப்படை விளைவாக 20 லட்சத்தில் இருந்து ஒன்பது கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.