Categories
மாநில செய்திகள்

BREAKING: ஐபிஎல்: தமிழகத்தில் தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த ட்ரீம் 11 ஆன்லைன் சூதாட்ட தளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ட்ரீம் 11 கிரிக்கெட் விளையாட்டு செயலிக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த ஆன்லைன் சூதாட்ட தளமான ட்ரீம் 11 தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நேற்று தமிழகத்தில் சட்டப் பேரவைக் கூட்டத்தின் போது சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், அதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ட்ரீம் 11 இணைய தளத்திற்கும் அது தொடர்பான விளம்பரங்களும் தடை விதிக்கப்பட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |