ஐஸ்வர்யா ராயிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதாக பனாமா வீக் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி ஐஸ்வர்யாராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விசாரணைக்கு டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். தற்போது விசாரணை நிறைவு பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.