Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒமைக்ரான் தடுப்பு…. பிரதமர் மோடி ஆலோசனை….!!!

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 77 உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இந்தியாவிலோ ஒமைக்ரான் பாதிப்பு 300-ஐ நெருங்கியது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  தற்போது தான் குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதன் பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |